பிரதீப் ரங்கநாதன் தான் தற்போது தமிழ் சினிமாவில் டிரெண்டிங் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அதை அவரே இயக்கியும் இருந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோவும் படைத்திராத சாதனையையும் முதல் படத்திலேயே படைத்தார் பிரதீப். அது என்னவென்றால், ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் ஹீரோ என்கிற சாதனையை படைத்திருக்கிறார்.
24
தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் பிரதீப்
லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த படம் டிராகன். அப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. பிரதீப்பின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படமும் இதுதான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது டிராகன். முதல் இரண்டு இடங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும், அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படமும் உள்ளது.
34
தீபாவளிக்கு இரண்டு பிரதீப் படங்கள்
டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூடு ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் கைவசம் உள்ள மற்றொரு படமான டியூடும் ஏற்கனவே அறிவித்ததை போல் தீபாவளிக்கு நிச்சயம் ரிலீஸ் ஆகும் என இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதனால் ஒரே நாளில் பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் சூழல் உருவாகி உள்ளது.