ஓடிடிக்கு வரும் பாகுபலி நாயகனின் படம்..ஒரே மாதத்தில் வெளியாக ஆர் ஆர் ஆர் தான் காரணமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 31, 2022, 07:38 PM ISTUpdated : Mar 31, 2022, 07:52 PM IST

சூப்பர் ஸ்டார் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' திரைப்படம், OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோக்களில் ஏப்ரல் முதல் தேதி ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

PREV
18
ஓடிடிக்கு வரும் பாகுபலி நாயகனின் படம்..ஒரே மாதத்தில் வெளியாக ஆர் ஆர் ஆர் தான் காரணமா?
radhe shyam movie

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் பேன் இந்தியா நாயகனான பிரபாஸ்.சமீபத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடித்துள்ள  படம் ராதே ஷ்யாம்.

28
radhe shyam movie

பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. 

38
radhe shyam movie

100 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டிருந்த இந்த படத்திலிலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததோடு ஹிட்டும் கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு.. தொடரும் சல்மான் கான் மீதான பாலியல் புகார்கள்..முன்னாள் காதலியின் ட்விட்டால் மீண்டும் பற்றிய தீ..

48
Radhe Shyam

இதையடுத்து  கடந்த மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் படம் ரிலீசானது. 

58
radhe shyam movie

ஆக்ஷன் குறைவு என்ற காரணத்தால் தான் தெலுங்கை தவிர்த்து வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் இப்படம் கடும் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது..

68
radhe shyam movie

இதனால் படத்திற்கு செலவிடப்பட்ட பட்ஜெட்டில் முக்கால் பாகம் கூட திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.  இரண்டு வாரத்தில் ரூ.200 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

78
radhe shyam movie

தாயரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் பிரபாஸ் தனது ரூ.100 கோடி சம்பளத்தில் இருந்து பாதியை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. மிஸ்டர் லோக்கல் நஷ்டம்..சிவகார்த்திகேயனுக்கு அபராதம்...தயாரிப்பாளரின் தடாலடி பதில் மனு

88
radhe shyam movie

இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் மற்றும் அதற்கான ஆதரவு பெருகியதால் காரணமாகவே ராதே ஷ்யாம் விரைவில் ஓடிடிக்கு போவதாக ஒரு பேச்சுண்டு. 

Read more Photos on
click me!

Recommended Stories