பிரபாஸின் தற்போதைய படங்கள்
பிரபாஸின் திரைப்படங்களைப் பொறுத்தவரை, தற்போது இயக்குனர் மாரிதி இயக்கும் திகில் நகைச்சுவைப் படமான 'ராஜாசாப்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதில் மால்விகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் 2025 டிசம்பரில் கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாகவுள்ளது. 'ராஜாசாப்' தவிர, பிரபாஸிடம் 'ஸ்பிரிட்', 'ஃபவுஜி', 'சலார் 2', 'கல்கி 2' ஆகிய படங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வெளியான 'கல்கி 2898 AD' படம் பெரிய வெற்றி பெற்றதால், பிரபாஸின் மவுசு மேலும் அதிகரித்துள்ளது.