தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட டாப் ஹீரோ... திடீர் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

First Published | Apr 11, 2021, 4:16 PM IST

வக்கீல் சாப் பட வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பவன் ஸ்டார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண்.ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஜன சேனா என்ற பெயரில் கட்சியையும் நடத்தி வருகிறார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பிங்க்'. இந்த படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் நடித்தார்.
Tap to resize

2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பட்டையைக் கிளப்பியது. டாப்ஸி வேடத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். பெண்ணுரிமை குறித்து பேசி இருந்த இந்த படம், இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான வக்கீல் சாப் திரைப்படம் வசூல் ரீதியாக தாறுமாறு சாதனை படைத்து வருகிறது. முதல் நாளே இந்திய அளவில் ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வக்கீல் சாப் பட வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பவன் ஸ்டார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜன சேனா கட்சியினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பாதுகாவலர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவர்களின் அறிவுரையின் படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜன சேனாவில் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்களுக்கு ஒரு வார இடைவெளியிலேயே அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே அமைதியான சூழ்நிலையில் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஓய்வில் இருக்க உள்ளதாகவும், காணொலி காட்சி மூலமாக ஜனசேனா கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!