ஆபாச படத்தால் மாறிய பெயர்... அப்போ மியா கலிபாவின் ஒரிஜினல் பெயர் இது இல்லையா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

First Published | Jun 27, 2023, 10:08 AM IST

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பேமஸ் ஆன நடிகை மியா கலிபாவின் ஒரிஜினல் பெயரைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

Mia Khalifa

ஆபாச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் மியா கலிபா. கடந்த 2014-ம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 5 ஆண்டுகள் மட்டுமே அப்படங்களில் நடித்தார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஆபாச படங்களில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், இன்றளவும் அவரது ஆபாச வீடியோக்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகை மியா கலிபா வேறு தொழில் செய்து வருகிறார்.

Mia Khalifa

லெபனான் நாட்டில் பிறந்தவரான நடிகை மியா கலிபா சிறுவயதிலேயே தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு ராணுவ அகாடமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார் மியா கலிபா. பின்னர் சில ஆண்டுகள் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கிறிஸ்துவரான இவருக்கு சிறுவயதில் பெற்றோர் வைத்த பெயர் சாரா ஜோ சாமுன்.


Mia Khalifa

சாரா ஜோ சாமுன் என்கிற கிறிஸ்துவ பெயர் கொண்ட இவருக்கு மியா கலிபா என்கிற இஸ்லாமிய பெயர் வரக் காரணம் அவரது முதல் ஆபாச படம் தான். அந்த படத்தில் மியா கலிபா என்கிற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மியா என்பது அவரின் செல்ல நாய்க்குட்டி பெயராம். அதோடு அவருக்கு பிடித்தமான ராப் பாடகர் விஸ் கலிபாவின் பெயரில் இருந்து கலிபாவை மட்டும் எடுத்துக்கொண்டு, மியா கலிபா என்கிற பெயரில் நடித்தார்.

இதையும் படியுங்கள்... பைக்கில் ஊட்டிக்கு செல்லும் போது கோர விபத்தில் சிக்கிய வாரிசு நடிகர்... வலது காலை இழந்த பரிதாபம்

Mia Khalifa

ஹிஜாப் அணிந்தபடி மியா கலிபா ஆபாச படத்தில் நடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவர் நடித்த அந்த ஆபாச படமும் வைரல் ஆனது. அவரின் இந்த ஆபாச படத்திற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தில் நடித்தது அவரது பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்களும் மியாவை கைவிடுவதாக அறிவித்தனர். ஹிஜாப் அணிந்து நடித்ததற்காக அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்திருந்ததாம்.

Mia Khalifa

இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்க தொடங்கியதால், தன்னை மியா கலிபா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் அவரின் ஒரிஜினல் பெயரான சாரா ஜோ சாமுன் என்பது காலப்போக்கில் காணாமல் போனது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பாட்டு பாட போனாலே... முதல்ல நீ என்ன சாதி-ன்னு தான் கேட்பார்கள்... சூப்பர் சிங்கர் அருணா சொன்ன பகீர் தகவல்

Latest Videos

click me!