வசூலில் மிரள வைக்கும் 'பொன்னியின் செல்வன்'.. வெறும் 4 நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி காலெக்ஷனா?

First Published | Oct 4, 2022, 1:14 PM IST

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான நாள் முதலே... ஒரு தரப்பினரிடம் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினரிடம் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று  வரும் நிலையில், 4 நாட்களில் உலக அளவில் 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

 பிரபல எழுத்தாளர் கல்கி சோழ மன்னர்களை பற்றிய வரலாற்றை, புனையப்பட்ட கதையாக எழுதிய நாவல் தான் 'பொன்னியின் செல்வன்'. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாவலை, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க முயன்ற போதிலும், சில காரணங்களால் அது முடியாமல் போனது. இதே கதையை, திரைப்படமாக எடுக்க வேண்டும் என, சுமார் 20 ஆண்டுகளாக முயற்சித்து வந்தவர் பிரபல இயக்குனர் மணிரத்னம். பட்ஜெட் காரணமாக இந்த படத்தின் பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் தற்போது இந்த படத்தை படமாக்கியுள்ளார்.
 

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான இந்த படத்தில்,   வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்துள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயசித்ரா, ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, சோபித துளிபாலா போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!
 

Tap to resize

இந்த படத்திற்கு இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டுள்ளார். அதே போல் ரவி வர்மன் ஒளிப்பதிவும், தோட்டா தரணினின் கலை பணிகளும் அபாரம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும், 5 பாகம் கொண்ட நாவலை ஒரு படமாக எடுப்பது அசாதாரணமான விஷயம். ஆனால் அதனை முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம் என நினைக்கும் போது இந்த சிறு குறைகள் கூட பெரிதாக தெரியவில்லை என்றே கூறலாம்.
 

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் முதல் நாளே 'பொன்னியின் செல்வன் 1' உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், மூன்றே நாட்களில் 200 கோடி வசூல் செய்து விட்டதாக, 'பொன்னியின் செல்வன் 1' படக்குழுவினரே அதிகார பூர்வ தகவலை வெளியிட்டிருந்தனர். இதை தொடர்ந்து நான்கு நாட்களில் இதுவரை 250 கோடிக்கும் மேல், இந்த படம் வசூல் செய்துள்ளதாகவும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர உள்ளதால்... வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: ஏர்போட்டில் ரசிகர் செய்த காரியம்... நடுங்கி போன நடிகை கரீனா கபூர்! வைரலாகும் வீடியோ..!
 

தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் மிரட்டி வருவதால், படக்குழுவினர் உச்சாகத்தில் உள்ளனர். இதே உச்சாகத்தோடு, அடுத்த பாகத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!