Pongal Release: முதல் படமே மெகா ஹிட்.! 9 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் இயக்குநரின் மாஸ் கம்பேக்.!

Published : Jan 13, 2026, 12:42 PM IST

9 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் நலன் குமாரசாமி 'வா வாத்தியார்' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், நலனின் வழக்கமான பாணியிலிருந்து மாறி ஒரு கமர்ஷியல் மசாலா படமாக உருவாகியுள்ளது. 

PREV
18
புதுமையான திரைக்கதை விருந்து.!

தமிழ் சினிமாவில் ‘பிளாக் ஹியூமர்’ எனும் புதிய பாணியைத் தொடங்கி வைத்து, இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குநராக மாறியவர் நலன் குமாரசாமி. 2013-ல் இவர் இயக்கத்தில் வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம், அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு புதுமையான திரைக்கதை அனுபவத்தைத் தந்து மெகா ஹிட் அடித்தது.

28
ம் 3 ஆண்டுகளில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.!

அதனைத் தொடர்ந்து 2016-ல் வெளியான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம், யதார்த்தமான காதலையும் வாழ்வியலையும் பேசி ரசிகர்களின் மனதை வென்றது. வெறும் 3 ஆண்டுகளில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த நலன், அதன் பிறகு நீண்ட காலம் படம் இயக்காமல் திரைக்கதை பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

38
9 ஆண்டு கால காத்திருப்பு ஏன்?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தின் மூலம் நலன் குமாரசாமி மீண்டும் இயக்குநராக களம் இறங்குகிறார். இந்த 9 ஆண்டு கால இடைவெளி குறித்து சமீபத்திய புரமோஷன் நிகழ்வில் நலன் மனம் திறந்து பேசினார். 

ஒவ்வொரு படமும் முந்தைய படத்தை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பயம் எனக்குள் இருந்ததாகவும் ஒரே நேரத்தில் பல கதைகளை எழுதுவது எனது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு கதை கௌதம் மேனன் பாணியில் வருவதாகத் தோன்றியதால் அதை நிறுத்திவிட்டு வேறு கதைக்கு மாறியதாக கூறிய நலன், பின் ஒரு ஆட்டோவில் இருந்த எம்.ஜி.ஆர் படம் தான் 'வா வாத்தியார்' கதையை மீண்டும் கையிலெடுக்கத் தூண்டியது என அவர் கூறினார்.

48
மசாலா ரூட்டில் நலன் குமாரசாமி!

தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, இந்த முறை ஒரு முழு நீள கமர்ஷியல் மசாலா படத்தை நலன் இயக்கியுள்ளார். இதில் கார்த்தி ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். 2019-லேயே முடிவான இக்கதை, கொரோனா சூழலால் தள்ளிப்போய் தற்போது பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரத் தயாராகிவிட்டது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் நலன் குமாரசாமியின் இந்த 'செகண்ட் இன்னிங்ஸ்' வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

58
பொங்கல் ரேஸில் ‘வாத்தியார்’ செய்த தரமான சம்பவம்.!

பல ஆண்டுகளாக ‘நலன் குமாரசாமி எப்போது கம்பேக் கொடுப்பார்?’ என ஏங்கிய ரசிகர்களுக்கு, 2026 பொங்கல் ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெறும் ஒரு படமாக மட்டுமல்லாமல், பல சட்டப் போராட்டங்களைக் கடந்து திரைக்கு வரும் வா வாத்தியார் கோலிவுட்டில் ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது.

68
திரையில் மிரட்டும் கார்த்திக்.!

இந்தப் படத்தில் கார்த்தி ஒரு எம்.ஜி.ஆர் ரசிகராகவும், ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரியாகவும் மிரட்டியுள்ளார். படத்தில் கார்த்தியின் ‘சிலம்பம்’ சுற்றும் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என இயக்குநர் நலன் ஒரு பேட்டியில் குசும்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

78
நிலவே ஹீரோயினாக நடிக்கும் வா வாத்தியார்

சந்தோஷ் நாராயணனின் அதிரடி இசை, ஜார்ஜ் சி வில்லியம்ஸின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு என ஒரு தொழில்நுட்பப் பட்டாளமே இதில் கைகோர்த்துள்ளது. கார்த்தியுடன் க்ரித்தி ஷெட்டி முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாவது கூடுதல் எதிர்பார்ப்பு.  

88
பொங்கல் ட்ரீட் காத்திருக்கு மக்களே.!

ஆண்டு கால ஏக்கத்தை ஒரு 'மாஸான' கமர்ஷியல் பேக்கேஜில் நலன் தீர்த்து வைப்பார் எனத் தெரிகிறது. 'சூது கவ்வும்' மூலம் திரைக்கதையில் விளையாடிய இந்த 'வாத்தியார்', இந்த பொங்கலை தன்வசமாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories