Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?

Published : Jul 05, 2026, 05:30 PM IST

Peddi OTT Release: 13 நாட்களிலேயே ரூ.400 கோடியை கடந்த 'பெத்தி' படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இப்போது ரசிகர்கள் காத்திருந்த ஓடிடி வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

PREV
15
பெத்தி ஓடிடி ரிலீஸ் தேதி

ராம் சரண் நடித்த பான் இந்தியா திரைப்படமான 'பெத்தி', உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியாகி வெறும் 13 நாட்களிலேயே உலகளவில் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தென்னிந்திய திரைப்படங்களில் முதலிடத்தை இந்தப் படம் பிடித்துள்ளது. பல முன்னணி படங்களின் வசூல் சாதனைகளையும் 'பெத்தி' பின்னுக்குத் தள்ளியிருப்பது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

25
புச்சி பாபு சனா இயக்கம்

தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தை வெங்கட் சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்கியுள்ள இந்த பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திங்க் ஸ்டுடியோஸ் வெளியீட்டை கவனித்தது.

அடேங்கப்பா! ரம்பாவுக்கு ரூ.2,000 கோடி சொத்து மதிப்பா? அசுர வளர்ச்சியின் பின்னணி!

35
ராம் சரண் படம்

படத்தின் மிகப்பெரிய பலமாக ராம் சரணின் நடிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட உடல்மாற்றமும், உணர்ச்சிகரமான நடிப்பும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது கவனிக்கத்தக்கது.

45
ஓடிடி வெளியீட்டு தேதி

இந்த வெற்றி, ராம் சரண் சினிமா பயணத்தில் மிகப்பெரிய சோலோ ஹிட்டாகவும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் சுமார் ரூ.287 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்த ஓடிடி வெளியீட்டு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

55
ஓடிடி வெளியீடு

ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள், விளையாட்டு, த்ரில் என பல அம்சங்கள் உருவாகியுள்ள 'பெத்தி'யில் ஜான்வி கபூர், திவ்யேந்து ஷர்மா, ஜெகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த இந்தப் படம், ஓடிடி வெளியீட்டிலும் அதே வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories