Rambha Net Worth: அடேங்கப்பா! ரம்பாவுக்கு ரூ.2,000 கோடி சொத்து மதிப்பா? அசுர வளர்ச்சியின் பின்னணி!

Published : Jul 05, 2026, 11:00 AM IST

Rambha Net Worth: தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ்களின் கனவுக்கன்னியான ரம்பா இன்று ரூ.2,000 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக திகழ்ந்து வருகிறார். ரம்யா இப்போது என்ன செய்கிறார்? அவரது குடும்பம் குறித்தும் பார்ப்போம். 

PREV
16
90 கிட்ஸ்களின் கனவுக்கன்னி ரம்பா

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சியர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் கனவுக்கன்னியான 'அழகிய லைலா' ரம்பாவின் சமீபத்திய நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அண்மையில் வைரலான ஒரு வீடியோவில் ரம்பா, ஒருவரின் உதவியுடன் மெதுவாக நடந்து வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்தினர்.

26
பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்

ரம்பா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஸ்டார் ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  விஜய்,  அஜித்குமார்,  விஜயகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், இந்தியில் சல்மான் கான் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். சுமார் 15 ஆண்டுகள் தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

36
தொழி அதிபரை மணமுடித்த ரம்பா

சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல நடிகைகளைப் போல இல்லாமல், ரம்பா ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து வெளிநாடு சென்றார். இவர் MagicWoods என்கிற நிறுவனத்தின் தலைவர். கணவரின் பிரம்மாண்டமான தொழில் சாம்ராஜியத்தில் உதவியாக இருப்பதுடன், சில தொழில்களை ரம்பாவே நிர்வகித்து வருகிறார்.

46
ரூ.2,000 கோடி சொத்துக்களுக்கு அதிபதியான ரம்பா

ரம்பா, நடிகையாக சம்பாதித்த பணத்தை சில தொழில்களில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் தொழில் மற்றும் ரம்பாவின் சொத்துக்கள் என அனைத்தையும் சேர்த்து, சுமார் 2, 000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக ஒரு மதிப்பீடு உள்ளது. ஆனால், இதுகுறித்து ரம்பா அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. சென்னை, ஹைதராபாத், கனடாவில் இவருக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளன.

56
வாழ்க்கையையே மாற்றிய கார் விபத்து
2022-ல் நடந்த ஒரு கார் விபத்து ரம்பாவின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 2022-ல், கனடாவின் டொராண்டோவில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது இந்த விபத்து நடந்தது. அவர்கள் சென்ற காரை மற்றொரு வாகனம் மோதியது. இதில் ரம்பாவுக்கும் குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டாலும், அனைவரும் உயிர் தப்பினர்.
66
மீண்டும் நடிக்க ரெடியான ரம்பா
ரம்பா தற்போது தனது இரண்டு மகள்கள், ஒரு மகனை கவனித்துக்கொண்டு, பிசினஸையும் பார்த்து வருகிறார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என பேட்டிகளில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories