This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

Published : Jun 01, 2026, 02:05 PM IST

June First Week OTT Releases : ஜூன் மாதம் தொடங்கியதும் புத்தம் புது படங்கள் ஓடிடி வெளியீட்டிற்காக வரிசைகட்டி நிற்கின்றன. அது என்னென்ன படங்கள்? எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகுது என்பதை பார்க்கலாம்.

PREV
15
This Week OTT Releases

ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. க்ரைம் த்ரில்லர், ஃபேமிலி டிராமா, ரொமான்டிக் காமெடி, ஆக்‌ஷன் படங்கள்னு எல்லா ஜானர்லயும் புது கன்டென்ட் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற தளங்கள்ல பல சுவாரஸ்யமான படங்கள், வெப் சீரிஸ் வெளியாகுது. அதோட முழு விவரம் இதோ.

25
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

29

விது, பிரீத்தி அஸ்ரானி நடிச்ச தமிழ் ரொமான்டிக் டிராமா. தியேட்டர்கள்ல ஓரளவுக்கு வெற்றி பெற்ற இந்த படம், இப்போ ஓடிடி-ல பல இந்திய மொழிகள்ல ரிலீஸாகப் போகுது. ஜூன் 5 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

மா பெஹன் (Maa Behen)

திரிப்தி டிம்ரி, மாதுரி தீட்சித், ரவி கிஷன் நடிச்ச க்ரைம் த்ரில்லர் இது. ஒரு சின்ன ஊர்ல நடக்குற கதை. இதோட விசித்திரமான கதையும், சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கு. ஜூன் 4ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்

துரந்தர்: தி ரிவென்ஜ் (Dhurandhar: The Revenge)

2025-ல் வந்த ஸ்பை த்ரில்லரோட சீக்வெல் இது. ரன்வீர் சிங் நடிச்ச இந்த 'Raw & Undekha' வெர்ஷன் வெளிநாடுகள்ல ஏற்கனவே ட்ரெண்டாகி வருது. இப்போ இந்தியாவுல டிஜிட்டல் ப்ரீமியருக்கு வருது. ஜூன் 4 அன்று நெட்ஃப்ளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

35
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

ஆபிஸ் ரொமான்ஸ் (Office Romance)

ஜெனிஃபர் லோபஸ், பிரட் கோல்ட்ஸ்டீன் நடிச்ச ரொமான்டிக் காமெடி படம். வேலையே கதியா இருக்குற ரெண்டு பேர், ஆபீஸ்ல ரகசியமா காதலிக்கும்போது அவங்க வாழ்க்கையில ஏற்படுற குழப்பம்தான் கதை. ஜூன் 5ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

மெக்சிகோ 86 (Mexico 86)

1986 ஃபுட்பால் டோர்னமென்ட்டை மெக்சிகோ எப்படி நடத்துச்சுங்கிறதை சுத்தி இந்த சீரிஸ் நகருது. டியாகோ லூனா, டேனியல் கிமெனெஸ் காச்சோ, கார்லா சௌசா முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

டீச் யூ எ லெசன் (Teach You A Lesson)

பள்ளிகள்ல ஒழுக்கம் சுத்தமா சீர்குலைஞ்சு போன நிலைமையில, விசித்திரமான இன்ஸ்பெக்டர்கள் உள்ள வந்து அந்த சிஸ்டத்தை எப்படி மாத்துனாங்கங்கிறதுதான் இந்த K-டிராமாவோட கதை. ஜூன் 5 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

தி மார்க்டு வுமன் (The Marked Woman)

ஒரு பெண், ஷிப்பிங் கன்டெய்னர்ல அடையாளம் தெரியாத நிலையில கண்டுபிடிக்கப்படுறதோட கதை தொடங்குது. அவங்க யாரு? எதுக்கு அவங்களை கொல்லப் பார்க்குறாங்க?ங்கிற மர்மத்தை சுத்தி இந்த சீரிஸ் நகருது. ஜூன் 5ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

45
இந்த வார ஓடிடி ரிலீஸ்

பேட்ரியாட் (Patriot)

மகேஷ் நாராயணன் இயக்கத்துல உருவான மலையாள ஆக்‌ஷன் த்ரில்லர். மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில் முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க. அரசாங்கத்தோட டிஃபென்ஸ் ஸ்பைவேரை தவறா பயன்படுத்துறதை அம்பலப்படுத்தின ஒரு முன்னாள் அதிகாரி தப்பிச்சு ஓடுறதுதான் கதை. ஜூன் 5 முதல் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிரவுன் (Brown)

கரிஷ்மா கபூர் நடிச்ச க்ரைம் த்ரில்லர் சீரிஸ். தனிப்பட்ட பிரச்சனைகளால பாதிக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு சீரியல் கில்லரை எப்படி துரத்திப் பிடிச்சாருங்கிறதுதான் கதை. ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

குல்லக் சீசன் 5 (Gullak Season 5)

ஒரு நல்ல ஃபேமிலி டிராமா சீரிஸா பெயர் எடுத்த 'குல்லக்' புது சீசனோட வருது. இந்த முறை அனந்த் ஜோஷி, அனு மிஸ்ரா கதாபாத்திரத்துல நடிக்க, மிஸ்ரா குடும்பத்தோட கதை இன்னும் சுவாரஸ்யமா தொடரப்போகுது. சோனி லிவ் ஓடிடியில் ஜூன் 5ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

55
ஓடிடியில் இந்த வாரம்

கேடி தி டெவில் (KD The Devil)

துருவா சர்ஜா நடிச்ச கன்னட ஆக்‌ஷன் படம். தியேட்டர்கள்ல நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் இப்போ ஓடிடி-க்கு வருது.ஜீ5-ல் ஜூன் 5 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தி பிரமிட் ஸ்கீம் (The Pyramid Scheme)

சீக்கிரமா பணம் சம்பாதிக்க ஆசைப்படுற ஒரு இளைஞன், பிரமிட் மார்க்கெட்டிங் பிசினஸ்ல இறங்குனதுக்கு அப்புறம் அவன் வாழ்க்கை எப்படி மாறுச்சுங்கிறதுதான் கதை. பரம்வீர் சீமா, ரன்வீர் ஷோரி முக்கிய ரோல்ல நடிச்சிருக்காங்க. ஜூன் 5ந் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

மேட் இன் இந்தியா: எ டைட்டன் ஸ்டோரி (Made In India: A Titan Story)

டைட்டன் பிராண்டோட வளர்ச்சிக்குப் பின்னாடி இருக்குற கதையை மையமா வெச்சு இந்த சீரிஸ் உருவாகியிருக்கு. நஸ்ருதீன் ஷா, ஜே.ஆர்.டி. டாட்டா கதாபாத்திரத்துலயும், ஜிம் சர்ப், ஜெராக்ஸஸ் தேசாய் கதாபாத்திரத்துலயும் நடிச்சிருக்காங்க. ஜூன் 3 முதல் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories