Parasakthi Box Office Day 3 : 3ம் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன பராசக்தி... பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Published : Jan 13, 2026, 10:38 AM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் மூன்றாம் நாள் வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது. அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இங்கே காணலாம்.

PREV
14
Parasakthi Box Office Collection

சிவகார்த்திகேயனின் 25-வது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் தம்பி கதாபாத்திரத்தில் அதர்வா நடித்திருக்க, ராணா டகுபதி, தனஞ்சயா, பேசில் ஜோசப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள்.

24
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன பராசக்தி

பராசக்தி திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸுக்கு பின்னர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இப்படத்தில் இந்தி எதிர்ப்பை காட்டாமல் சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளை தான் அதிகம் காட்டி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக காதல் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

34
கலவையான விமர்சனம்

சூரரைப் போற்று, இறுதிச்சுற்று போன்ற படங்களை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருந்த சுதா கொங்கரா, பராசக்தி படத்தையும் அதே பாணியில் தான் எடுத்திருந்தார். ஆனால் அந்த இரண்டு படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பராசக்தி ஏற்படுத்தவில்லை. இதனால் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பராசக்தி திரைப்படம் பெற்று வருகிறது. இப்படத்தில் கேமியோ ரோலில் வந்த ராணா டகுபதி மாஸாக எண்ட்ரி கொடுத்தாலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேசில் ஜோசப் வந்த காட்சி மட்டும் ரசிக்கும்படியாக இருந்தது.

44
சரியும் வசூல்

கலவையான விமர்சனத்தால் வசூலில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது இப்படம். அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10.16 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாள் ரூ.8.27 கோடி வசூல் செய்திருந்தது. மூன்றாம் நாளில் இப்படத்தின் வசூல் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்படம் மூன்றாம் நாளில் ரூ.2.49 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. படக்குழு இப்படம் இரண்டு நாட்களிலேயே 51 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்தாலும், மூன்றாம் நாள் வசூல் நிலவரம் அதற்கு உல்டாவாக உள்ளது. பொங்கலுக்கு இப்படம் எந்த அளவுக்கு வசூல் அள்ளுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories