லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர கௌரி நடித்துள்ள இந்த படம் கடந்த 13ம் தேதி வெளியானது.
பேட்ட படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை பட்டியலுக்கு இந்த படம் அவரை உயர்த்தியுள்ளது.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை 200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் மலையாள வெர்ஷனுக்கு மாளவிகா மோகனுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவர் டப்பிங் பேசியுள்ளார். அந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான் அது. இதுகுறித்து அவரே தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது ஒரு கிடாயின் கருணை கதை என்ற படத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.