Pandian Stores 2 : ஷாக் மேல ஷாக் கொடுத்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு!

Published : Jul 31, 2025, 08:01 PM IST

Pandian Stores 2 Serial Raji Revealed Her Marriage Secrets : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக பேசுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

PREV
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டிஆர்பி ரேட்டிங்

Pandian Stores 2 Serial Raji Revealed Her Marriage Secrets : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. அதிகப்படியான ரசிகர்களை இந்த சீரியல் கொண்டிருந்தாலும் ரேட்டிங்கில் தடுமாறி வருகிறது. சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது, கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.26 டிஆர்பி ரேட்டிங் உடன் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

27
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு

இப்படி தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் உச்சம் தொடும் வகையில் இன்றைய எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பார்க்கும் ரசிகர்களின் இதயங்களை அதிகளவில் துடிக்க வைக்கும் வகையில் இன்றைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது, தனது கணவரின் டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக தனது நகையை விற்க ராஜீ முடிவு செய்தார். இதற்காக தனது அப்பாவின் ஃபைனான்ஸ் கம்பெனி என்பது கூட தெரியாமல் அந்த கம்பெனியில் நகையை விற்க முடிவு செய்தார்.

37
கதிருக்கு உதவி செய்ய எண்ணிய ராஜீ

அதன்படி அவர் கொன்று சென்ற 30 பவுன் நகைக்கு பவுன் ஒன்றிற்கு ரூ.60 ஆயிரம் வீதம் கொடுக்கப்படும், அதுவும் மாலை தான் கொடுக்கப்படும் என்று கம்பெனியில் சொல்லிவிடவே, சரி என்று வீட்டிற்கு வந்த ராஜீக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராஜீ ஒன்று நினைக்க அது வேறொன்றில் முடிகிறது. ஏற்கனவே அந்த நகையை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வாங்கி வந்த போது உடனே பழனிவேல் மாமாவிடம் கொடுத்து உன்னுடைய வீட்டில் கொடுக்க சொல்லு என்று கதிர் பலமுறை ராஜீயிடம் சொல்லியிருக்கிறார்.

47
சக்திவேலுவிடம் மாட்டிக் கொண்ட ராஜீ

ஆனால், அதையெல்லாம் கேட்காத ராஜீ, கதிர் வங்கி லோனுக்கு கஷ்டப்படுவதை பார்த்து தன்னுடைய நகையை விற்க முடிவு செய்தார். அதற்காக தனது பைனான்ஸிற்கு சென்ற போது மாட்டிக் கொண்டார். அதாவது, அந்த நகை எல்லாவற்றையும் சக்திவேல் எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு வந்துவிட்டார். இதை வைத்து பாண்டியனை பழி தீர்க்க ஆசைப்பட்டார். அதற்காக பாண்டியனையும், அவரது குடும்பத்தினரையும் கூப்பிட்டார். இதில் பாண்டியனைத் தவிர மற்ற அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர்.

57
பாண்டியனை பழிதீர்க்க எண்ணிய சக்திவேல்

அப்போது ராஜீக்கு புரிந்துவிட்டது. தனது நகையை வைத்து தான் இப்போது பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது. உடனே அலுவலகத்தில் இருந்த மீனாவிற்கு போன் போட்டு அவரை வீட்டிற்கு வரச் சொல்லவே, சரவணன், கதிர், செந்தில், மயில், கோமதி என்று எல்லோருமே வந்துவிட்டனர். கடைசியில் பாண்டியன் வரவே சக்திவேல் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

67
உண்மையை வெளிப்படுத்தும் ராஜீ

அதே போன்று முத்துவேலும் தன் பங்கிற்கு இடிக்க பாண்டியன் உள்பட அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது ராஜீ மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் கதிரையும், தனது மாமனார் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது.

77
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வீடியோ

நாளைய எபிசோடுக்கான புரோமோவில் ராஜீ தான் காதலித்த ஒருவன் தன்னை ஏமாற்றி தனது நகைகளை எடுத்து சென்றுவிட்டான். அப்போது நான் தற்கொலைக்கு முயற்சி செய்த போது கதிர் தான் என்னை காப்பாற்றி குடும்ப மானத்தை காப்பாற்ற திருமணமும் செய்து கொண்டான் என்று உண்மையை வெளிப்படுத்தினார். இதைக் கேட்டு ஒட்டு மொத்த குடும்பத்தினருமே அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories