பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 425ஆவது எபிசோடானது செந்தில் வாடிக்கையாளரின் கொடுத்த பணத்தை எடுத்து வைத்து கொண்டதாக பாண்டியன் குற்றம் சாட்டுகிறார். அரசு வேலைக்கு பணம் தேவைப்படுகிறது என்று எடுத்து வைத்துக் கொண்டதாக அவர் மீது வீண் பழி போடுகிறார். இதனால், வருத்தப்படும் செந்தில் தனது மனைவி மற்றும் அம்மாவிடம் சொல்லி அழுகிறார். அதன் பிறகு கடைக்கு லோடு வருகிறது என்று கடைக்கு சென்றுவிடுகிறார்.
24
குமாருடன் காதலில் அரசி
இதற்கிடையில் அரசி மற்றும் குமாரு இருவரும் போனில் பேசிக் கொள்கிறார்கள். ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சென்ற தங்கமயிலுக்கு நேரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேனேஜரிடம் சார் 6 மணி, 7 மணியாகிவிட்டது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், மதிய ஷிப்ஃடுக்கு வருகிறவர்கள் இன்று லீவு போட்டாங்க, அதனால், 8 மணி வரையிலும் இருக்க வேண்டும். கஸ்டமர் வந்திருக்காங்க அவர்களை பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
தனது மனைவி வருவதற்கு லேட் ஆகும் என்று அம்மா சொல்லியதைத் தொடர்ந்து அவர் வேலை செய்வதாக சொன்ன ஆபிஸூக்கு வந்துவிடுகிறார். மேலும், வெளியில் வெயிட் பண்ணுவதாக தங்கமயிலுக்கு போன் செய்கிறார். பயந்து பயந்து வேலை பார்க்கிறார் தங்கமயில். கடைசியாக தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடுகிறார்.
44
கதிரை ஒன் சைடாக காதலித்த காதலி
மேலும் கதிரை ஒன்சைடாக காதலித்த காதலி ஒருவர் ராஜீயிடம் வந்து பேசுகிறார். நீங்கள் லவ் மேரேஜா? யார் காதலை புரபோஸ் பண்ணுனது என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். அப்போது அவர்களுக்கு இடையூறாக கதிரும் வந்து ராஜீ அழைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.