ரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லை..! லோக்கல் ரியாக்ஷனில் இறங்கி கொடுத்த போஸ்!

First Published Oct 18, 2020, 5:32 PM IST

நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில், போஸ் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அல்லி வரும், வி.ஜே.சித்ரா தற்போது ரவுடி பேபி கெட்டப்பில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
undefined
அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை அழகாக சொல்லும் இந்த சீரியல், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.
undefined
இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
undefined
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார்.
undefined
ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
undefined
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லைக்கு என இல்லத்தரசிகள் பலரும் ஆர்மியே ஆரம்பிக்கும் அளவிற்கு ஃபேனாக மாறிவிட்டார்கள்.
undefined
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
undefined
நிச்சயதார்த்தத்திற்கு பின் வருங்கால கணவர் உடனும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
undefined
விரைவில் இவருடைய திருமணம் இருந்தாலும், தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை அசர வைக்கிறார்.
undefined
அந்த வகையில் தற்போது ரவுடி ஸ்டைலில் புடவை கட்டி விதவிதமான ரியாக்ஷன் கொடுத்துள்ளார் சித்ரா.
undefined
செம்ம கெத்தாக கொடுத்துள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
click me!