BIGGBOSS ULTIMATE
தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது.
BIGGBOSS ULTIMATE
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
BIGGBOSS ULTIMATE
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் (KamalHaasan) தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார்.
BIGGBOSS ULTIMATE
அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
BIGGBOSS ULTIMATE
அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார்.
BIGGBOSS ULTIMATE
நடிகை வனிதா விஜயகுமார் திடீரென்று தானாகவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
BIGGBOSS ULTIMATE
கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
oviya
இதற்கிடையே பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் அல்ட்டிமேட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.