எப்பேர்பட்ட அப்பாடக்கரானாலும் திறமை இருந்தால் கோலிவுட்டில் 'கில்லி'! ஓரங்கட்டப்பட்ட பிரபலங்களின் வாரிசுகள்!

First Published Jun 26, 2020, 4:37 PM IST

பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை பிரபலங்களின் வாரிசுகளை மேலே ஏற்றி விட பலர் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்கள், நடிகர் அதிக முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையான திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம் பிடித்தால், அவர்களின் பட வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
 

பட வாய்ப்புகள் தொடர்ந்து பறிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு சமீபத்தில் இறந்தார்.
undefined
ஆனால் கோலிவுட் திரையுலகில் நிலைமையே வேறு, எப்பேர்ப்பட்ட பிரபலங்களின் வாரிசாக இருந்தாலும் அவர்கள் போராடி வந்தால் மட்டுமே நிலைக்க முடியும். அந்த வகையில் பல போராட்டங்கள் விமர்சனங்களை எதிர்த்து வெற்றி கண்டவர்கள் சிலரே...
undefined
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின், 'தொட்டால் பூ மலரும்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், பிரபல இயக்குனர் வாசுவின் மகன் சக்தி. இந்த படத்தை தொடர்ந்து, மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றால் திரையுலகில் இருந்து விலகினார்.
undefined
பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். 'ஸ்டுடென்ட் NO 1 ' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜோர், வெற்றிவேல் சக்திவேல் என தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து சில படங்கள் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, சத்யா போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. எனவே முன்னணி இடத்தை பிடிக்க ஓயாமல் போராடி வருகிறார்.
undefined
பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகனாக மாறியவர். சித்து +2 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கை பேசி என சில படங்களில் நடித்தார். ஆனால் தற்போது வரை முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை. தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதி ராஜா. இவருடைய மகன் மனோஜ் 'தாஜ்மகால்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதிலும், தொடர்ந்து தேர்வு செய்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், துணை நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார்.
undefined
சைவம் படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் நாயரின் இரண்டாவது மகன் லுத்புதீன், இந்த படத்தை தொடர்ந்து, பறந்து செல்லவா படத்தின் நாயகனாக அறிமுகமானார். இந்த படம் படுதோல்வி அடைத்தது. எனவே தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வருகிறார்.
undefined
இயக்குனர் பாண்டியராஜன் மகன் ப்ரிதிவி ராஜன். கைவந்த கலை படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து நாளைய பொழுது உண்டு, வாய்மை, உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தாலும், இவரால் ரசிகர்கள் மனதில் இன்னும் இடம்பிடிக்கமுடியவில்லை.
undefined
நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹாதேவன், இவர் என்னுள் ஒருவன் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தோல்வியடைந்ததால் முற்றிலும் திரையுலகில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.
undefined
இனி எல்லாம் சுகமே என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் உதயா. இவரும் இன்று வரை தன்னுடைய திறமையை நிரூபிக்க திரையுலகில் தொடர்ந்து போராடி வருகிறார்.
undefined
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், இவர் நடித்த சகாப்தம் மற்றும் மதுரை வீரன் ஆகிய படங்கள் இவரை ஒரு நடிகராக, தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிய வைத்தாலும் இன்னும் முன்னணி இடத்தை பிடிக்க இவருக்கும் போராடி வருகிறார்.
undefined
click me!