காந்தாராவை விடுங்க... அதற்கு முன் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறாரா ரிஷப் ஷெட்டி..?

Published : Oct 07, 2025, 11:12 AM IST

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் காந்தாரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள, இந்த நேரத்தில் அவர் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை மறக்க முடியுமா... அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
16
Films directed by Rishab Shetty

நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கத்தில் தற்போது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பிளாக்பஸ்டர் படத்தின் வெற்றிக்கு மத்தியில், ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் நீங்கள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்களைப் பற்றி பார்க்கலாம்.

26
ரிக்கி

ரிக்கி, இது ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய முதல் திரைப்படம். இதில் ரக்‌ஷித் ஷெட்டி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடித்திருந்தார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். ஒரு சாதாரண பெண் நக்சலைட்டாக மாறும் கதையை இது கொண்டுள்ளது. காதலைக் காப்பாற்ற காதலன் என்ன செய்கிறான் என்பதைச் சொல்லும் அழகான கதை. இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

36
கிரிக் பார்ட்டி

கிரிக் பார்ட்டி, கல்லூரி வாழ்க்கையின் நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் கலந்த அழகான கதை. இப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இது ஒரு சூப்பர் ஹிட் படம். சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். இப்படத்தின் மூலம் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

46
சர்க்காரி ஹிரிய பிராத்தமிக ஷாலே, காசர்கோடு

சர்க்காரி ஹிரிய பிராத்தமிக ஷாலே, காசர்கோடு பல விருதுகளை வென்ற ஒரு அழகான திரைப்படம். இது எல்லையோரப் பகுதிகளில் உள்ள கன்னடப் பள்ளிகளின் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. வளரும் காதல் கதை, கன்னடத்தைக் காக்கும் போராட்டம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த அழகான கதையுடன் கூடிய இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படமும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.

56
காந்தாரா

காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா நடித்திருந்தனர். இது கன்னட சினிமாவை நாடு முழுவதும் அறியச் செய்தது. தேசிய விருது வென்ற இப்படம், துளுநாட்டின் தெய்வங்கள் மற்றும் பழங்குடி மக்களை பெரிய குடும்பத்தினர் எப்படி நடத்தினார்கள் என்பதைப் பற்றியது. இப்படத்தை 16 கோடி பட்ஜெட்டில் எடுத்தார் ரிஷப் ஷெட்டி. இப்படம் 400 கோடி வசூலை வாரிக் குவித்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

66
காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1 வெளியாகி ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. மாநிலம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ், நடிப்பு என அனைத்தும் அற்புதமாக வந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

Read more Photos on
click me!

Recommended Stories