நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகும் 'கருப்பு' திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக இணைந்துள்ள 'கருப்பு' திரைப்படம் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
25
ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஆரம்பத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இப்படம், தற்போது கோடை விடுமுறை (Summer Release) விருந்தாக ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
35
இரண்டாவது பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "இப்படத்திற்காக நாங்கள் ஏற்கனவே பல போஸ்டர்களை வெளியிட்டுவிட்டோம், எனவே இனி அப்டேட் என்று வந்தால் அது நேரடியாக இரண்டாவது பாடல் பற்றியதாகத்தான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். அந்த இரண்டாவது பாடலோடு சேர்த்து படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, அனகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ் மற்றும் சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கட்சி சேர' புகழ் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'God Mode' ஏற்கனவே சமூக வலைதளங்களில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.
55
செம்மையான கதைக்களம்
இது ஒரு அதிரடி திரில்லர் மற்றும் கோர்ட் ரூம் டிராமா பின்னணியில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'கருப்பு', சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.