விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஓன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி பாசம் பற்றி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
தமிழில் மட்டுமல்ல இந்த சீரியல் தெலுங்கு, கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கான பேன்ஸ் படை பெரியது.
இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக இருப்பது கதிர் - முல்லை இவர்களுடைய ஊடலும், காதலும் தான் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் சீரியலில் இனி அவர்கள் போர்ஷன் கட்டாகும். அதனால் விறுவிறுப்பு குறைவதை தடுக்க கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக புது நடிகையை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது.
கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்ய சாய் கிருஷ்ணா என்பவரை களமிறங்கியுள்ளனர்.
இவர் ஏற்கனவே ஜீ தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல சீரியல்களில் நடித்தவர்.
தற்போது கதிர் - முல்லை ரொமான்ஸ்க்கு டப் கொடுக்கும் விதமாக கண்ணன் ஜோடியின் காதல் சீசன்கள் பின்னி பெடலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.