ஒருவேள கொன்றுப்பாங்களோ! காஷ்மீர் சென்ற 3 நாளில் சென்னைக்கு ரிட்டர்ன் ஆன திரிஷா - கேள்வியெழுப்பும் நெட்டிசன்ஸ்

First Published | Feb 5, 2023, 3:27 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா, 3 நாட்களில் சென்னை திரும்பியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அதோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லலித் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் மூணாறில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாத இறுதியில் படக்குழு அனைவரும், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படக்குழுவினருடன் நடிகை திரிஷாவும் சென்றிருந்தார். அங்கு ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... லியோ படத்தால் மிஷ்கினுக்கு வந்த திடீர் மவுசு... குவியும் வாய்ப்புகளால் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம்

Tap to resize

இந்நிலையில், காஷ்மீர் சென்ற 3 நாட்களில் நடிகை திரிஷா மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அவர் நேற்று முன்தினம், டெல்லி ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், என்னது திரிஷாவை அதுக்குள்ள கொன்னுட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லோகேஷ் படங்களில் ஒன்று ஹீரோயினே இருக்க மாட்டார். அப்படி இருந்தால் அவர்களை கொன்றுவிடுவார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்த காயத்ரியை கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். இதனால் லியோ படத்திலும் திரிஷாவை அப்படி இரண்டே நாட்களில் கொன்றுவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களோ என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கி உள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், “இதுக்கு ஏன் காஷ்மீர் வரைக்கும் கூட்டிட்டு போகணும். இங்கயே செட் போட்டு கொன்னுருக்கலாமே? ஐடியா இல்லாத பசங்க” என கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் எது உண்மை என்பது படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியவரும். அதுவரை இதுபோன்ற அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... லியோ படத்தால் மிஷ்கினுக்கு வந்த திடீர் மவுசு... குவியும் வாய்ப்புகளால் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம்

Latest Videos

click me!