மகனுக்கு காட்டப்போகும் முதல் படத்தை சொன்ன காஜல்... ப்ளீஸ் விவேகம் படத்த காட்டீராதிங்கனு நெட்டிசன்கள் கிண்டல்

First Published | Mar 8, 2023, 10:32 AM IST

நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நீலுக்கு முதன்முதலில் தான் நடித்த துப்பாக்கி திரைப்படத்தை தான் காட்டுவேன் என சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் பேரரசு இயக்கிய பழனி திரைப்படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, அஜித்துடன் விவேகம், தனுஷ் ஜோடியாக மாரி என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆன காஜல், தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவருக்கு கடந்த 2020 ஆண்டு திருமணம் நடந்தது. இவர் மும்பையை சேர்ந்த கெளதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்...சமந்தா அவுட்... சாய் பல்லவி இன்...! - புஷ்பா 2 படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

Tap to resize

இதுதவிர கோஸ்டி என்கிற தமிழ் படத்திலும் நடித்து முடித்துள்ளார் காஜல், இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு காட்டப்போகும் முதல் படம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அதன்படி தனது மகனுக்கு 8 வயது வரை எந்தபடத்தையும் காட்டப்போவதில்லை என தெரிவித்த காஜல், அதன்பின் முதலில் தான் விஜய்க்கு ஜோடியாக நடித்த துப்பாக்கி திரைப்படத்தை காட்ட உள்ளதாக கூறினார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், தயவு செய்து உங்கள் மகனுக்கு விவேகம் படத்தை மட்டும் காட்டீராதீங்க என ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர். விவேகம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்திததோடு, அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காஜல் பாடல் பாடியதும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனால் தான் அப்படத்தை காட்ட வேண்டாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...சிம்புவின் திருமணம் இப்படித்தான் நடக்கும்... மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் பேட்டி

Latest Videos

click me!