பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம், என கனவு கண்ட மீரா மிதுனுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் நொந்துபோன மீரா மிதுன் தமிழகம் தனக்கு சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை.
நானெல்லாம் பாலிவுட் பீஸ் இந்திக்கு போய் பார்த்துக்குறேன் என சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.
ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன், பப்ளிசிட்டிக்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
அது ஒன்னும் பெருசா ஒர்க் அவுட் ஆன மாதிரி தெரியல.. அதனால் ரூட்டை மாற்றிய மீரா மிதுன் கோலிவுட் பிரபலங்களை விமர்சிப்பதன் மூலம் தான் பிரலமாக முயற்சித்து வருகிறார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் கொச்சையாக பேசி வந்த மீரா மிதுனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருப்பதாக கூறி மீரா மிதுன் டூ பீஸில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dreamy Nights என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளதாகவும், அது செப்டம்பர் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் படுமோசமான ஆடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள மீரா மிதுன், நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளார்.
படு கவர்ச்சியாக இருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய்க்கு வந்த படி மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர். ஒருவேளை ஆபாச படத்தில் நடிச்சிருப்பாங்களோ என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.