நடிகர் சைஃப் அலி கான் தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சைஃப் அலி கானுக்கும், அம்ரிதா சிங்கிற்கும் சாரா லிகான் என்ற மகளும், இப்ராஹிம் என்ற மகனும் உள்ளனர். தற்போது 24 வயதாகும் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தனுஷுடன் ‘அத்ரங்கி ரே’ இந்தி படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாலிவுட் நடிகை கரீனா கபூரை காதலித்து வந்த சைஃப் அலிகான் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சைஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதிக்கு தற்போது தைமூர் அலி கான் என்ற 3 வயது மகன் இருக்கிறார்.
இந்நிலையில் கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது அதை சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எங்களுடைய குடும்பத்தில் புதிதாக ஒரு நபரை வரவேற்க காத்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருடைய அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
நல்ல செய்தி சொன்ன சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், 24 வயது மகளை வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது குழந்தை தேவையா? என சில விஷமிகள் கலாய்த்தும் வருகின்றனர்.