சந்தானத்தால் இத்தனை சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்தாரா சிவகார்த்திகேயன்?

Published : Feb 20, 2025, 11:06 AM ISTUpdated : Feb 20, 2025, 11:12 AM IST

Santhanam vs Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சில பட வாய்ப்புகளை தவறவிட்டதற்கு சந்தானம் தான் காரணம் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

PREV
15
சந்தானத்தால் இத்தனை சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்தாரா சிவகார்த்திகேயன்?
santhanam vs Sivakarthikeyan

இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி வில்லன்கள் வரை பலரும் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க தான் ஆசைப்படுகிறார்கள். காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் டிரெண்டை நாகேஷ், விவேக், வடிவேலு போன்றோர் தொடங்கி வைத்தாலும் அதில் அவர்களால் பெரிதும் சோபிக்க முடியவில்லை. ஒன்றிரண்டு ஹிட் படங்களுடன் மீண்டும் காமெடிக்கே திரும்பிவிட்டனர். அந்த வரிசையில் காமெடியனாக உச்சத்தில் இருந்தபோதே சினிமாவில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்தவர் சந்தானம்.

25
Santhanam

அஜித், விஜய் என முன்னணி நடிகர்களே சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் வகையில் செம பிசியான காமெடியனாக வலம் வந்த சந்தானம், திடீரென நடித்தால் ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன் என முடிவெடுத்தார். அவரின் இந்த முடிவு ஆரம்பத்தில் அவருக்கு கைகொடுத்தாலும் போகப் போக அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாப் ஆகி வந்தன. அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தற்கு சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு.

இதையும் படியுங்கள்..பராசக்தி படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்; ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

35
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக அறிமுகமானாலும் அடுத்தடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என தன்னை ஒரு ஹீரோவாக மெருகேற்றிக் கொண்டே சென்றார். அவரின் வளர்ச்சியால் தான் சந்தானமும் காமெடியை கைவிட்டு ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்தாராம். இவரைப்போலவே காமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது விடுதலை, கருடன், கொட்டுக்காளி என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து சந்தானத்தையே ஓவர்டேக் செய்துவிட்டார்.

45
Netizens Says Sivakarthikeyan Missed super hit movies because of santhanam

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர்கள். இதில் சிவகார்த்திகேயனும் சந்தானமும் சில படங்களில் இணைந்து பணியாற்றுவதாக இருந்ததாம். ஆனால் சந்தானத்தின் பிடிவாதத்தால் அந்த பட வாய்ப்புகள் எல்லாம் சிவகார்த்திகேயன் தவறவிட்டிருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி படத்தில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் தான் நாயகனாக நடிக்க இருந்தாராம். அவருடன் நடிக்க சந்தானம் மறுப்பு தெரிவித்ததால் அதில் இருந்து சிவகார்த்திகேயன் நீக்கப்பட்டு வேறு ஹீரோவை வைத்து எடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

55
Sivakarthikeyan Missed Raja Rani and Endrendrum Punnagai Movie

அதேபோல் ஜீவா, வினய், சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட்டான என்றென்றும் புன்னகை படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்ததாம். அப்படத்தில் வினய் நடித்த கதாபாத்திரத்தில் சிவா நடிக்க இருந்ததாக நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது என ஜீவா கூறியதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் அதற்கும் சந்தானம் தான் காரணம் என கூறி வருகின்றனர். இப்படி சிவகார்த்திகேயன் 2 சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை மிஸ் பண்ணியதற்கு சந்தானம் முக்கிய காரணம் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Madharasi : ஷூட்டிங் முடியும் முன்பே கோடிகளை குவிக்கும் மதராஸி; SK படத்துக்கு இம்புட்டு டிமாண்டா?

Read more Photos on
click me!

Recommended Stories