18 வயதிலேயே ஹாலிவுட்டை கலக்கும் தமிழச்சி... இதுக்காக 15 ஆயிரம் பேரை அசால்டாக ஓரங்கட்டியிருக்காங்க...!

First Published Jun 17, 2020, 4:35 PM IST


நெட் பிளிக்ஸில் வெளியாகி உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது நெவர் ஹேவ் ஐ எவர் என்ற காமெடி வெப் சீரிஸ். இந்த தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான சந்தோஷத்தில் இருக்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய 'நெவர் ஹேவ் ஐ எவர்' என்ற தொடரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது.
undefined
அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது ஆகியவையே கதை.
undefined
'நெவர் ஹேவ் ஐ எவர்' படத்தில் தேவி விஸ்வகுமார் என்ற 15 வயது சிறுமியாக நடித்திருக்கிறார் கனடாவை சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
undefined
இந்த தொடரில் லீட் ரோலில் நடித்திருக்கும் 18 வயதே நிரம்பிய மைத்ரேயி ராமகிருஷ்ணன் ஈழத்திலிருந்து கனடாவிற்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்து தமிழ் பெண்.
undefined
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆடிசனில் பங்கேற்பதற்காக விளையாட்டாக விண்ணப்பித்த மைத்ரேயி, கிட்டதட்ட 15 ஆயிரம் பேரை பின்னுக்குத் தள்ளவிட்டு தேர்வாகியுள்ளார்.
undefined
ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதால் உங்களுடைய பெயரை மாற்றிக் கொள்வீர்களா என மைத்ரேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் கனடிய தமிழ் பெண் ஈழத்திலிருந்து புலம் பெயந்த பெற்றோரின் மகள், அந்த அடையாளத்தை நான் எப்போதும் இழக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
undefined
இந்த வெப் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கனடா, அமெரிக்கா, இந்தியா, இலங்கையில் மைத்ரேயி ராமகிருஷ்ணனை பின்தொடரும் ரசிகர்கள் பட்டாளம் லட்சத்தில் அதிகரித்து வருகிறது.
undefined
click me!