பீஸ்ட் டீமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ..படப்பிடிப்பு முடிந்த கையோடு எங்கு சென்றுள்ளனர் பாருங்க..

Kanmani P   | Asianet News
Published : Apr 25, 2022, 05:14 PM IST

பீஸ்ட் சூட்டிங் முடிந்த கையேடு நடிகர் விஜய் நெல்சன், பூஜா ஹெக்டே இ=உள்ளிட்ட படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்துள்ளார்.

PREV
18
பீஸ்ட் டீமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ..படப்பிடிப்பு முடிந்த கையோடு எங்கு சென்றுள்ளனர் பாருங்க..
beast

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில்  ஹிட் கொடுத்து வரும் விஜயின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

28
beast

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்தப் படம் சென்னை, டெல்லி, ஜார்ஜா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி முன்பு வைரல் ஆனது.

38
beast

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்துள்ளது.. படம் வெளியாகும் முன்பே ப்ரீ புக்கிங் மூலம் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது பீஸ்ட்.

48
beast

டெல்லியில் உள்ள பிரபல வணிக வளாகத்தை தீவிரவாதிகள் கைது செய்கின்றனர் அங்கு அகப்பட்டுக் கொண்ட மக்களை நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை நகைச்சுவை கலந்த திரில்லராக நெல்சன் கொடுத்திருந்தார்.

58
beast

அனிருத் இசையமைத்து இருந்த இந்தப் படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் செம ஹிட் அடித்தது இது அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். அதேபோல ஜாலியோ ஜிம்கானா பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார்.

68
beast

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான விஜயின் பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் மனதில் கொண்டாட்டத்திற்குரிய படமாகவே மாறியுள்ளது.

78
beast

முந்தைய படங்கள் போலவே டார்க் காமெடியை கொண்டிருந்தாலும் ஒரே இடத்தில் 'காமெடி; காதல்; ஆக்சன் என ஒரு ஃபுல் மீல்சை கொடுத்துள்ளார் நெல்சன்.

88
beast

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு விஜய் தன்னுடன் பயணித்த நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இது குறித்தான புகைப்படத்தோடு விஜய்க்கு நன்றி கூறியும் பதிவுகளை வெளியிட்டு உள்ளார் நெல்சன்.

Read more Photos on
click me!

Recommended Stories