தமிழில் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும், நயன்தாராவுக்கு உள்ள மவுசே தனி தான்.
இவர் தனி நாயகியாக நடித்து வெளியாகும் படங்கள், முன்னணி நடிகர்களுக்கு சமமாக பாக்ஸ் ஆபீசில் கல்லா கட்டுவதால் அம்மணிக்கு பட வாய்ப்பு பிச்சுக்கிட்டு கொட்டுகிறது.
தமிழில் 4 கோடி ஒரு படத்திற்கு வாங்கினால், தெலுங்கில்... 6 கோடி வரை இவருடைய மார்க்கெட் எகிறி போய் உள்ளது.
இந்நிலையில், தற்போது நயன்தாரா விரதம் இருந்து நடித்து முடித்துள்ள திரைப்படம், 'மூக்குத்தி அம்மன்'.
இதுவரை நடித்திராத அம்மன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் நயன்தாரா.
இந்த படத்தை முதல் முறையாக இயக்கி உள்ளார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஓடிடி தளத்தில், வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகி வரும் நிலையில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.
ஆனால் கசிந்த தகவல் குறித்து, இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தான் தெரிய வரும்.