அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ புற்றுநோயால் மரணம்...! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

First Published | Aug 29, 2020, 11:18 AM IST

இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் மார்வல் காமிக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், அந்தந்த மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டாலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதிலும் கடந்த வருடம் வெளியான மார்வலின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை, அயன் மேனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கொடுத்திருந்தார். அதே போல் ஆண்ட்ரியாவும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிற்கு டப்பிங் கொடுத்திருந்தார்.
Tap to resize

இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவர், ப்ளாக் பேந்தர். நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் டைட்டானியம், என்னும் உலோகத்தை பாதுகாக்கும் வக்காண்டா என்ற ஊரின் அரசன் தான் இந்த ப்ளாக் பேந்தர்.
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் கிளைமேக்ஸ் இந்த இடத்தில் தான் நடக்கும், இங்கு வந்து தான் தானோஸ் உலகத்தை அழிப்பான்.
மேலும், ப்ளாக் பேந்தர் சோலோ ஹீரோவாக நடித்த படமும், வெளியாகி அதிக வசூல் செய்தது.
இப்படத்தின் நாயகனாக சாட்விக் போஸ்மேன் தான் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர், கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.
௪௩ வயதே ஆகும் இந்த சூப்பர் ஹீரோவின் மரணம் அவருடைய ரசிகர்களையும், குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!