Nayanthara Photos : சேலையில் மொத்த அழகை காட்டி! செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்

Ganesh A   | Asianet News
Published : Jan 06, 2022, 02:00 PM IST

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கண்கவர் சேலையில் நயன்தாரா போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

PREV
19
Nayanthara Photos : சேலையில் மொத்த அழகை காட்டி! செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

29

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

39

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.

49

இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்கிற புதிய படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

59

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது தனது காதலனுடன் சேர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிறுவனம் தற்போது கனெக்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், ஊர்க்குருவி, கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

69

இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து பணியாற்றியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தமாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

79

இதற்கான புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

89

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் நான் பிழை என்கிற பாடல் வெளியாகி வைரலானது. இதன் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்ற நயன்தாராவின் லுக் அனைவரும் வெகுவாக கவர்ந்தது.

99

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கண்கவர் சேலையில் அவர் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories