தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.
டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி.
“நானும் ரவுடி தான்” படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின.
அரைகுறை ஆடையில் டூயட் பாடுவது, ஹீரோ பின்னால் சுற்றி காதலில் கசிந்துருகுவது போன்ற கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று வருகிறார்.
இப்படிப்பட்ட நயன்தாரா இடையில் உஜாலா விளம்பரத்தில் நடித்தது ரசிகர்களை கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தது. இருப்பினும் விளம்பரத்தில் கூட கறுப்பு நிற புடவை, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் சும்மா ஜம்முனு வந்த நயனை யாரும் ரசிக்காமல் இல்லை.
சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்திருக்கும் நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், நடிகை நயன்தாரா தலை நிறைய மல்லிப்பூ வைத்தப்படி தழைய தழைய மஞ்சள் நிற சேலையில் ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக உள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.