பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா... காதலர் விக்னேஷ் சிவனின் கைவண்ணத்தில் ஒரே ஜொலி, ஜொலிப்பு...!

First Published | Nov 19, 2020, 12:35 PM IST

அவ்வளவு பிரம்மாண்ட அலங்காரங்களுக்கும் இடையிலும் துளி கூட மேக்கப் இன்றி சிரித்த முகத்துடன் நிற்கும் நயன்தாராவின் அழகை பார்த்து பிரம்மிக்காதவர்கள் இருக்க முடியாது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.
காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே எல்லாம் முடிந்தது என்ற தமிழ் சினிமாவின் வழக்கத்தை மாற்றி இரண்டு முறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் விழுந்ததை விட வேகமாக எழுந்து நின்றார்.
Tap to resize

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட மட்டுமல்ல, நயனின் கேரியரிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. அதன் பின்னர் முழுக்க கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என நடித்து பட்டையைக் கிளப்பினர்.
அதேபோல் அஜித், விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடனும் போட்டி, போட்டி நடித்து வருகிறார். விஸ்வாசம், பிகில், தர்பார் என நயன் ஜோடியாக நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.
இத்தனை புகழுக்கும் பெருமைக்கும் சொந்தமான நயன்தாரா நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். காதலர் விக்னேஷ் சிவனும் நயனின் பிறந்த நாள் பரிசாக அவர் தயாரித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசரை வெளியிட்டு தாறுமாறு வைரலாக்கினார்.
இந்நிலையில் நேற்று நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
5 விதவிதமான கேக்குகள் அறை முழுவதும் லைட் மற்றும் பூக்களால் அலங்காரம் என தூள் கிளப்பி இருக்கிறார் காதலர் விக்னேஷ் சிவன்.
Nayanthara
அவ்வளவு பிரம்மாண்ட அலங்காரங்களுக்கும் இடையிலும் துளி கூட மேக்கப் இன்றி சிரித்த முகத்துடன் நிற்கும் நயன்தாராவின் அழகை பார்த்து பிரம்மிக்காதவர்கள் இருக்க முடியாது.

Latest Videos

click me!