என் நீலோத்தி... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் காதலர் தின கலக்கல் கிளிக்ஸ் இதோ

Published : Feb 14, 2026, 04:00 PM IST

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
16
Nayanthara Valentines Day Photoshoot

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலோ, அல்லது 40 வயதைக் கடந்துவிட்டாலோ அவர்கள் ஃபீல்டு அவுட் ஆகிவிடுவார்கள் அல்லது ஹீரோவின் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தாவிவிடுவார்கள் என்கிற எழுதப்படாத விதி சினிமாவில் இருந்து வந்தது. அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கியவர் தான் நயன்தாரா. அவருக்கு 40 வயது ஆனாலும் பான் இந்தியா அளவில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

26
காதல் திருமணம் செய்த நயன்தாரா

நடிகை நயன்தாராவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் நானும் ரெளடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றியதில் இருந்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்தனர். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2022ல் திருமணம் செய்துகொண்டனர்.

36
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணமான நான்கு மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வாடகைத் தாய் மூலம் அந்தக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அதில் ஒரு குழந்தைக்கு உயிர் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலகம் என்றும் பெயரிட்டு இருக்கிறார்கள்.

46
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிக்காக காத்திருக்கும் விக்கி

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருமே சினிமாவில் பிசியாக உள்ளனர். விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற ஃபேண்டஸி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார்.

56
நயன்தாராவின் மூவி லைன் அப்

நயன்தாரா கைவசம் தமிழில் மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் கன்னடத்தில் யாஷ் உடன் டாக்ஸிக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் நிவின் பாலி உடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ், மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் பேட்ரியாட் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

66
நயன் - விக்கியின் காதலர் தின போட்டோஷூட்

சினிமாவில் பிசியாக இருந்தாலும் இன்று காதலர் தினத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஜோடியாக கொண்டாடி உள்ளனர். அவர்கள் இருவரும் காதலர் தினத்திற்காக ஸ்பெஷல் ரொமாண்டிக் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories