இது போன்று ஒரு சில படங்களில் நடித்திருந்த ரோபோ சங்கருக்கு தனுஷின் மாரி படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, சிங்கம் 3, கலகலப்பு 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, கோப்ரா, தேசிங்கு ராஜா 2, சொட்ட சொட்ட நனையுது ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். கடந்த வாரத்திற்கு முன்னதாக நடைபெற்ற எலிமினேஷன் சுற்று போட்டியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து செல்லும் போது விசில் அடித்துக் கொண்டே சென்றார். இந்த நிலையில் தான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.