Akhanda 2 Jukebox Released : அகண்டா 2 ஜூக்பாக்ஸ்: நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி கூட்டணியில் உருவாகும் அகண்டா 2 திரைப்படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. தமன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக்பாக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அகாண்டா 2 படம் தான் இப்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அகாண்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் போயபதி ஸ்ரீனு. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
25
அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா
இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபீர் துகான் சிங், ரவி மரியா, பூர்ணா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
35
பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணி
பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணியில் இது நான்காவது படம். இதற்கு முன் இவர்களது கூட்டணியில் சிம்ஹா, லெஜண்ட், அகண்டா படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. ஆதலால் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவின் கெட்டப் ஆக்ரோஷமாக உள்ளது. சிவபக்தி தொடர்பான அம்சங்கள் அதிகமாக இருக்கும்.
45
அகாண்டா 2 ஆடியோ ஜூக்பாக்ஸ்
இந்த நிலையில் தான் இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆக்ஷன் படத்தின் ஆடியோ ஜூக்பாக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. தமன் இசையில் அகண்டா 2 மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் பாகத்தில் தியேட்டர்கள் அதிரும் அளவிற்கு தமன் இசை அமைத்திருந்தார். பாலகிருஷ்ணாவின் மாஸ் காட்சிகளுக்கு பிஜிஎம் தெறிக்கவிட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
55
பாலகிருஷ்ணா மற்றும் ஆதி
வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.