தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், தொடர்ந்து நடிகை சமந்தா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற பிரபலங்கள் பார்த்து பொறாமைப்படும் விதமாக, குடும்பம் - கணவர் என அனைவரையும் அனுசரித்து சென்றார். எனவே இவரை பார்த்து பொறாமை படாத பிரபலன்களே இல்லை என்றும் சொல்லலாம்,
Naga Chaitanya
தற்போது நாக சைதன்யா, முதல் முறையாக தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்கிற படத்தில் நடித்துள்ளார். மே 12-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இப்படி பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில்.. விவாகரத்து பெற்றாலும், நட்பாக தொடரலாம் என்று கூறிய கருத்து குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், அரவிந்த்சாமி, சம்பத்ராஜ், கிஷோர், பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.