நாக சைதன்யா நடிப்பில், பான் இந்தியா படமாக வெளியாகி, அவருக்கு ரூ.100 கோடி வசூலை பெற்று கொடுத்துள்ள திரைப்படம் தான் 'தண்டேல்'. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
24
உண்மை கதையின் பின்னணியில் உருவான தண்டேல்
ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை பற்றிய உண்மையை கதையை மையப்படுத்தி காதல் கதைக்களத்துடன் உருவான படம் தான் 'தண்டேல்'. மீனவர்கள் தெரியாமல் பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைகிறார்கள். பின்னர் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சிறையில் அடைகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள், அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்து வெளியே வருகிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமான கதைக்களத்தில் இயக்குனர் கூறி இருந்தார்.
34
ரூ.100 கோடி வசூல்:
இந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்த இந்த படம், உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியது. நாகசைதன்யாவின் இது முதல் 100 கோடி வசூல் படம் என்பதால், அவருடைய ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.100 கோடி வசூலித்தது லாபம் என்றாலும், பான் இந்தியா அளவில் வெளியான ஒரு படத்திற்கு இது குறைவு என்பதே திரைப்பட விமர்சகர்களின் கருத்து.
44
தண்டேல் ஓடிடி ரிலீஸ் தேதி:
இயக்குனர் சந்து மொண்டேடியி இயக்கிய இந்த படத்திலும், சாய் பல்லவி ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் 14-ஆம் தேதி அன்று, 'தண்டேல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.