இளையராஜா மகன் பெயரில் மோசடியா?... யுவன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை...!

First Published | Jan 24, 2021, 11:04 AM IST

தல அஜித்தை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான அஜித், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சிலர் பொதுவெளிகளில் அவருடைய பிரதிநிதி போல் முன்னிலைப்படுத்தி வருவதாகவும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஏதாவது நிறுவனமோ, தனி நபரோ அணுகினால் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகும் படியும் தெரிவித்திருந்தார்.
அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த திரையுலக பிரமுகர் ஒருவர், சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்டுகளை வாங்கி தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு நிறுத்தாமல் பல பிரபல கல்லூரிகளுக்கு போன் செய்து அஜித் பெயரைப் பயன்படுத்தி மெடிக்கல் சீட் கேட்டுள்ளது தெரியவந்தது. மற்றொருவர் பைனான்சியர்களிடம் பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஜித் தரப்பில் இருந்து இப்படியொரு அறிக்கை வெளியானதாக கூறப்பட்டது.
Tap to resize

தற்போது தல அஜித்தை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிவிப்பில், எனது நிறுவனங்களான ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் ஏதும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் பணப் பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அஜித்தை போலவே பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பெயரில் தவறான வழிகளில் பயன்படுத்துவதால் தான் இப்படியொரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!