எம்.எஸ்.விஸ்வநாதன் 92 ஆவது பிறந்தநாள்..! அரிய புகைப்பட தொகுப்பு!

First Published Jun 24, 2020, 12:40 PM IST

மறைந்த இசை மாமேதை, எஸ்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...
 

கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு, ஜூன் 24 ஆம் தேதி மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் எனப்படு எம்.எஸ்.விஸ்வநாதன்.
undefined
விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார், இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
undefined
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்றார்.
undefined
13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
undefined
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.
undefined
தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
undefined
இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார்.
undefined
இவர்கள் இருவரும்பணம்என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன்திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல்சத்யராஜ்நடித்தஎங்கிருந்தோ வந்தான்என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள்.
undefined
விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
undefined
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றியுள்ளார் விஸ்வநாதன்.
undefined
தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார்
undefined
கலைமாமணி, உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
undefined
தன்னுடைய அழகிய குடும்பத்துடன், எம்.எஸ்.விஸ்வநாதன் எடுத்து கொண்ட புகைப்படம்.
undefined
click me!