காதல் கிசுகிசுக்கு மத்தியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிருணாள் தாக்கூர் - முதல் படமே இந்த ஹீரோ உடனா?

Published : Jan 28, 2026, 03:47 PM IST

நடிகை மிருணாள் தாக்கூர் அண்மையில் காதல் கிசுகிசுவில் சிக்கிய நிலையில், அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள படம் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
Mrunal Thakur Tamil Debut

சீதா ராமம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் மிருணாள் தாக்கூர். அப்படத்திற்கு பின்னர் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த ஏராளமான இயக்குநர்கள் போட்டிபோட்டனர். அதில் ஏ.ஆர். முருகதாஸும் ஒருவர். அவர் நடிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் ஹீரோயினாக நடிக்க பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது மிருணாள் தாக்கூர் தான். ஆனால் அந்த சமயத்தில் பாலிவுட்டில் அவர் பிசியானதால் அந்த வாய்ப்பு ருக்மிணி வசந்துக்கு சென்றது. தற்போது மிருணாள் தாக்கூர் ஒருவழியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்த வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

24
மிருணாள் தாக்கூர் அறிமுகமாகும் படம் எது?

அதன்படி மிருணாள் தாக்கூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம் மிருணாள் தாக்கூர். அப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். காட் ஆஃப் லவ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இப்படம் தான் மிருணாள் தாக்கூரின் கோலிவுட் அறிமுகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

34
காதல் சர்ச்சை

நடிகை மிருணாள் தாக்கூர் சமீப காலமாக தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவரைப் பற்றிய காதல் வதந்திகள் தான். அவர் நடிகர் தனுஷை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் வருகிற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால் அதைப்பற்றி இருவருமே வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். நடிகர் தனுஷின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

44
சிம்புவுக்கு ஜோடி

தனுஷுடனான காதல் கிசுகிசுக்கு பின்னர் நடிகை மிருணாள் தாக்கூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளது தற்போது மேலும் பேசு பொருள் ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிப்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இது காதல் சம்பந்தமான படமாக இருக்கும் என கூறப்படுவதால், சிம்புவுக்கும் மிருணாள் தாக்கூருக்கும் இடையே நிறைய ரொமாண்டிக் காட்சிகள் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஜோடிக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories