இந்நிலையில் இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுநர் சுப்பிரமணிய சுவாமியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த பதவியில் இளையராஜா நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரம், இலக்கியம், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இளையராஜா இடம் பெறுவார் என தெரிகிறது.