Motta Rajendran Stunt Artist to Comedy Actor Journey in Tamil : தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராகத் தொடங்கி, பின் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராகப் உருவெடுத்தவர் தான் மொட்டை ராஜேந்திரன். இவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராகத் தொடங்கி, பின் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராகப் உருவெடுத்தவர் தான் மொட்டை ராஜேந்திரன். ‘நான் கடவுள் படத்தில் இவரை தெரியாதவர்கள் யாராலும் இருக்க முடியாது . இவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவர் பாலா அவர்கள் இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார்.முன்பு ஸ்டண்ட் கலைஞராக இருந்த அவர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.
23
வரலாறு:
மொட்டை ராஜேந்திரன் என்னுடைய அப்பா பைட்டராக இருந்தார். அவருடைய அண்ணனும் பைட்டராக இருந்தார். சின்ன அண்ணனும் அதே பணியில் தான் இருந்தார். அவர்களை பின் பற்றி மொட்டை ராஜேந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பைட்டர் ஆக நடித்திருக்கிறேன். கடைசியாக பிதாமகன் என்ற படத்தில் பாலா சார் உடன் பணியாற்றும் போது அவர் உடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அதன் மூலம் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார் அந்த படத்தின் மூலமே நான் தமிழ் சினிமாவில் பிரபலமானேன். அப்ப படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.
33
நகைச்சுவை திரைப்படங்கள்:
சந்தானம் உடன் காமெடியாக நடிக்க தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு காமெடி துறையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. தெறி படத்தில் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு அட்லீ கொடுத்திருந்தார். அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். அவரது குரல் தனித்துவமாக இருப்பதால் குரலுக்காகவே காமெடிகள் உருவாக்கப்பட்டு இருந்தது என்றும் சொல்லலாம். ராஜா ராணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நான் சிகப்பு மனிதன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.