படப்பிடிப்பில் நடந்த கொடூரம்! இயக்குநரின் செயலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கும்பமேளா புகழ் நடிகை மோனாலிசா!

Published : Mar 25, 2026, 06:47 PM IST

சினிமா படப்பிடிப்பின் போது இயக்குநர் ஒருவர் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், உடல் பாகங்களைத் தொட்டு நரக வேதனை கொடுத்ததாகவும் நடிகை மோனாலிசா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

PREV
15
Monalisa

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் மூலம் இணையவாசிகள் மத்தியில் வைரலாகி, தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் மோனாலிசா. இவரை தனது படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாக கூறி, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தார். தொடக்கத்தில் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், திடீரென சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

25
Tamil Cinema News 2026

இயக்குநர் சிறைக்குச் சென்றதால் மோனாலிசாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அவர் ஒரு நேர்காணலில் தனக்கு நேர்ந்த பயங்கரமான பாலியல் அத்துமீறல்கள் குறித்து கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "நான் முதன்முதலில் சனோஜ் மிஸ்ரா படத்தில் கமிட் ஆனபோது, படப்பிடிப்புத் தளத்திலேயே அவர் என்னிடம் தவறாக நடக்கத் தொடங்கினார்.

35
Monalisa shocking revelations in Tamil

எனது குடும்பத்தினர் அங்கேயே இருந்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் எனது உடல் பாகங்களைத் தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டார். இது எனக்குப் பிடிக்கவில்லை என நான் அவரிடம் நேரடியாகக் கேட்டபோது, 'முதல் படம் என்றால் அப்படித்தான் இருக்கும்' என்று மிகவும் சாதாரணமாகப் பதிலளித்தார்" எனக் கூறி கதறி அழுதார்.

கல்வியா? கிளாமரா? - வெளிநாட்டில் படிக்க போவதாகக் கூறிவிட்டு அரோரா செய்த வேலை!

45
Monalisa casting couch controversy

"முதல் படம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? முதல் படம் என்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா?" என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநரின் இந்த அத்துமீறல்கள் தன்னை மன ரீதியாகப் பெரிதும் பாதித்ததாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

ஏஆர் ரகுமான் தயங்கி தயங்கி பாடிய ஒரு பாடல் – 30 ஆண்டுகளாக மேஜிக் செய்யும் அற்புதம்!

55
Monalisa interview about director misbehavior

இயக்குநரின் சிறைவாசம் ஒருபுறம் இருக்க, மோனாலிசா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories