என்னோட பிஎம்டபிள்யூ கார் வெள்ளத்துல போயிருச்சு – மிர்ச்சி சிவா கூலாக பகிர்ந்த தகவல்!

First Published | Dec 2, 2024, 8:35 AM IST

Mirchi Shiva BMW Car Stuck in Flood : தன்னோட பிஎம்டபிள்யூ கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டதாக நடிகர் மிர்ச்சி சிவா அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.

Mirchi Shiva BMW Car Stuck in Flood

Mirchi Shiva BMW Car Stuck in Flood : 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 12பி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. நடிகர் மட்டுமின்றி டயலாக் ரைட்டராகவும் இருந்துள்ளார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக (ஆர்ஜே) பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தான் சினிமாவில் கால் பதித்தார். இப்போது வருடத்திற்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

Soodhu Kavvum 2: Naatum Nattu Makkalum

12பி படத்துக்கு பிறகு கமல் ஹாசன் நடித்த ஆளவந்தான், விசில், சென்னை 600028, சரோஜா, தமிழ் படம், வா, பதினாறு, கோ, கலகலப்பு, கலகலப்பு 2 என்று பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படம் வெளியானது. பார்ட்டி படம் இன்னும் வெளிவரவில்லை. இப்போது சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Latest Videos


Michi Shiva Soodhu Kavvum 2

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான ஹிட் படமான சூது கவ்வும் படத்தின் 2ஆம் பாகத்தில் தான் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் பிஎம்டபிள்யூ கார் பற்றி பேசியுள்ளார்.

Mirchi Shiva Filmography

இது குறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க…நான் BMW கார் வச்சிருந்தேன். ஆனால், முதலில் நான் அந்த கார் வாங்குவதாக ஐடியாவே இல்லை. யுவன் சங்கர் ராஜா இருக்காருல அவர் தான் இந்த கடைல வாங்கிக்கோ என்று கடை பற்றி சொன்னாரு. கடையில இருந்தவரும் நல்லவரு. இல்ல சிவா இந்த காருக்கு நீங்கள் தான் தகுதியானவர் என்று அந்த காரை கொடுத்தார்.

Mirchi Shiva BMW Car

ஆனால், அந்த கார் வெள்ளம் வந்த போது அந்த வெள்ளத்துல போயிருச்சு. அப்போது நான் சிரிச்சிக்கிட்டே இருந்தேன். யாராவது எடுத்து சென்றுவிட்டால் ஏன் என்னோட காரை எடுத்துட்டு போன என்று கேட்கலாம். ஆனால், இது இயற்கை. நாம என்ன செய்ய முடியும். இயற்கை தான் எனக்கு அந்த காரை கொடுத்தது. நடிச்சு, சம்பாதிச்சு அதன் மூலமாக அந்த காரை வாங்குனேன். இப்போது அந்த இயற்கையே அந்த காரை எடுத்து சென்றுவிட்டது. அதில் லாஸ் என்றும் எதுவும் இல்லை. மொபைல் போனும் அந்த மாதிரிதான். வந்தது, போனது அவ்வளவு தான் என்று கூலமாக பேசியுள்ளார்.

click me!