ரீலில் வில்லன்... நிஜத்தில் சொக்க தங்கம்! 'குக் வித் கோமாளி' பரிசு தொகையை மைம் கோபி என்ன செய்தார் தெரியுமா?

First Published | Aug 2, 2023, 5:37 PM IST

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், டைட்டில் பட்டத்தை கைப்பற்றிய மைம் கோபி... பரிசாக கிடைத்த 10 லட்சம் ரூபாயை என்ன செய்ய போகிறார் என்பதை அறிவித்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமையல் நிகழ்ச்சியை கூட, ஒரு காமெடி நிகழ்ச்சியை போல் மாற்றிய பெருமை விஜய் டிவி 'குக் வித் கோமாளியை' தான் சேரும். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையை சேர்ந்த இளம் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. முதல் சீசனில், சர்ச்சை நடிகையாக பார்க்கப்படும் வத்திக்குச்சி வனிதா டைட்டில் பட்டத்தை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டிலை வெற்றனர். இதை தொடர்ந்து மிகவும் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில், மைம் கோபி டைட்டிலை தட்டிச் சென்றார்.

ஜீவானந்தத்தை போட்டு தள்ள துடிக்கும் குணசேகரன்! வெளியான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ!

Tap to resize

இரண்டாவது பரிசை சிருஷ்டி டாங்கேவும், மூன்றாவது பரிசை நடிகை விசித்திராவும் பெற்றனர்.  டைட்டில் வின்னரான மைம் கோபிக்கு, பரிசு தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களே டைட்டில் பட்டதை கைப்பற்றியுள்ள நிலையில்,  ஆண் போட்டியாளர் ஒருவர் டைட்டிலை வென்றது இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னரான மைம் கோபி, தனக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்க சொக்க தங்கம் என்றும், இது போன்ற நல்ல மனம் கொண்ட உங்களுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திரையுலகில் அதிர்ச்சி..! நடு ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பாலா பட காமெடி நடிகர்!
 

Latest Videos

click me!