எம்.ஜி.ஆர் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?

First Published | Jun 12, 2021, 3:06 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர் தன்னுடைய கையில் அழகிய குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது யார்? என்று தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள்... 
 

பொதுவாகவே, முன்னணி ஹீரோ, ஹீரோயின்களின், குழந்தை பருவ புகைப்படம் வெளியானால் அது ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்படும்.
இப்படி ஒரு மாஸ் ஹீரோ... மற்றொரு பிரபலத்தின் கையில் குழந்தையாக இருந்தால், சொல்லவே வேண்டாம் வேற லெவலில் இருக்கும்.
Tap to resize

அப்படி தான் தற்போது நடிகர் சூர்யாவை, முன்னாள் தமிழக முதலமைச்சருமான, புரட்சி தலைவருமான எம்.ஜி. கையில் தூக்கி வைத்திருக்கும் அரிய புகைப்படம் வெளியாக, அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, நடிப்பில் கடைசியாக வெளியான 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் வெளியாகி உலக அளவில் பல ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு, 100 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதில் இருந்து மீண்டுள்ள சூர்யா, இயக்குனர் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்க உள்ளார். கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்த பின்னர்.. அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!