நடிகை மீனாவின் மாஸ்டர் மைண்ட்... 10 கோடிக்கு வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்று அசத்தல்...!

Published : Apr 09, 2026, 10:38 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தான் 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்பனை செய்துள்ளாராம். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Meena Sells Luxury House

தமிழ் திரையுலகில் தனது இயல்பான அழகும், திறமையான நடிப்பும் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மீனா. 1980–90களில் இருந்து இன்று வரை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அஜித் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் மோகன்லால் ஜோடியாக மலையாளத்தில் நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார்.

24
வீட்டை விற்பனை செய்த மீனா

இந்நிலையில், நடிகை மீனாவின் வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய ரிஸ்க்கை ஏற்று அவர் எடுத்த ஒரு முடிவு இன்று அவருக்கு அபாரமான லாபத்தை கொடுத்துள்ளது. அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய தொகையாக கருதப்பட்ட 10 கோடி ரூபாய் கடனை வங்கியில் இருந்து பெற்று, தமிழ்நாட்டில் ஒரு பிரமாண்டமான பாரம்பரிய பங்களா வீட்டை கட்டினார் மீனா. பொதுவாக பலர் ஆடம்பர பொருட்களில் முதலீடு செய்யும் நிலையில், அவர் நிலையான சொத்து முதலீட்டை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

34
கலைநயத்துடன் கட்டிய வீடு

பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் அந்த வீடு, செதுக்கப்பட்ட மரத் தூண்கள், விசாலமான நடுமுற்றம் மற்றும் அரண்மனை பாணி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன கட்டிடங்களின் நடுவில் இப்படிப்பட்ட பழமையான கலை நயத்துடன் கூடிய வீடுகள் அரிதாகிவிட்டதால், இந்த பங்களாவுக்கு தனி மதிப்பு உருவானது. இதன் அழகில் கவரப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர், குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்தவர்கள், இந்த வீட்டை உயர்ந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில், அந்த வீடு சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
மீனாவுக்கு குவியும் பாராட்டு

ஒரு காலத்தில் கடன் சுமையாக இருந்த முதலீடு, இன்று பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இதன் மூலம், நடிகை மீனா ஒரு திறமையான முதலீட்டாளர் என்றும், பணத்தின் மதிப்பை நன்கு அறிந்தவர் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். 10 கோடி ரூபாய்க்கு கட்டிய வீட்டை 100 கோடிக்கு விற்பனை செய்துள்ள மீனாவுக்கு நைனிகா என்கிற மகளும் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் சாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் மறைவு மீனாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இருப்பினும் படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்து தன்னுடைய மகளை நன்கு வளர்த்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகா, தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories