தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகின மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. 25 நாட்களிலே ஒட்டுமொத்தமாக 240 கோடி ரூபாய்க்கு மேல் மாஸ்டர் திரைப்படம் வசூல் செய்ததால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் விஜய்யை புகழ்ந்து தள்ளினர்.

தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சனின் அடுத்த படத்தில் தளபதி விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோ ஷூட் சன் டி.வி. அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தளபதி விஜய், நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின.

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அருண் விஜய், தளபதியுடனும் மல்லுக்கட்டினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தளபதி 66 படம் குறித்த பேச்சுக்கள் அதிகமாக வைரலாகி வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக கசிந்துள்ள தகவல் ஒன்று ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்பா விஜய்யைப் போல் இல்லாமல் மகன் ஜேசன் சஞ்சய் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சினிமாவில் இயக்குநராக வர வேண்டும் என்ற ஆசை கொண்ட சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பலரும் விஜய் மகனை வைத்து படமெடுக்க கால்ஷீட் கேட்டு வரும் நிலையில், தளபதி அதற்கு தலையசைக்கவில்லை என்ற தகவல் பலமுறை வெளியாவது உண்டு. அதேபோல் சஞ்சய்க்கும் அப்பா விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். இதுகுறித்து பேசியதற்கும் விஜய் பிடிகொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால் புதிதாக வெளியாகியுள்ள தகவலின் படி தளபதி விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனையில் தளபதி விஜய் ஈடுபட்டுள்ளதாகவும், தளபதி 65 படத்தை முடித்த கையோடு இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன. அப்படின்னா மகன் இயக்க அப்பா நடிக்கப்போகும் படம் தான் தளபதி 66 ஆக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.