லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஆனால் முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் 25 நாட்களை கடந்து பட்டையைக் கிளப்பி வருகிறது.
படம் வெளியான முதல் வாரத்தில், “மாஸ்டர்” திரைப்படம் தான் உலக அளவில் முதலிடத்தில் கலெக்ஷன் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படங்களை வசூலில் மாஸ்டர் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். ஓட்டுமொத்தமாக உலக அளவில் 200 கோடியை முதல் மூன்று நாட்களிலேயே வசூல் செய்ததாக கூறப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தது வரும் 'மாஸ்டர் படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஹீரோவாக நடித்த விஜய், சம்பளமாக 80 கோடி பெற்றுள்ளார். இவருக்கு நிகரான வில்லன் வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இசையமைப்பாளர் அனிரூத், 'மாஸ்டர்' படத்திற்கு இசையமைத்ததற்காக 3 . 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிரூத்தை விட குறைவாக 2 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.