லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. இதில் மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தமிழகத்தையும் கடந்து ஓட்டுமொத்த இந்தியாவை முழுவதும் வசூல் ரீதியாக சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வரை வசூல் செய்துள்ளது. தற்போது ஓடிடியிலும் அதிக பார்வையாளர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய் வீட்டில் வேலை செய்யும் நபராக கலாட்டா குரு என்பவர் நடித்திருந்தார். ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.
யூ-டியூப் சேனல் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் கற்பகம் என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை கற்பகத்திற்கும் கலாட்டா குருவிற்கும் திருமணம் நடந்ததுள்ளது. கோயிலில் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
மாஸ்டர் பட வெற்றியை அடுத்து கலாட்டா குருவின் திருமணத்திற்கும் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் சோசியல் மீடியா மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.